Wednesday 27 January 2016

NEENGINAL SUDUVATHU - நீங்கினால் சுடுவது

                                                          நீங்கினால் சுடுவது
               அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமண வைபவம் இனிதே முடிந்தது மஞ்சள் பூசி, திலகம் ,தீட்டி மலர்  சூடி, மாலையணிந்து  தோழியர் புடை சூழ
அழைத்து வரப்பட்ட  மணப்பெண் பள்ளியறைக்குள் தள்ளப்பட்டாள் |
அவனுக்காக நீண்ட நேரம் காத்திருந்த அவளை ,உடல் அசதியால் அவள் கண்கள் உறக்கத்திற்கு அழைக்கிறது |ஆனால் அவள் மனமோ ......

                                              கண்ணே கண்ணே  உறங்காதே
                                              காதலர் வருவார் கலங்காதே
                                              பெண்ணே பெண்ணே மயங்காதே
                                              பெண்மையை வழங்கத் தயங்காதே
என்று அலைக்கழிக்கிறது  இருந்தாலும் கண் அயர்ந்து விட்டாள் |சற்று நேரத்தில் அவன் அவள் அறைக்குள் நுழைகிறான் |சடங்கு சம்பிரதாயங்களால் இந்தச் சமுதாயம் அவளைஅவனுக்கு சுதந்திரமாக்கி ,தாரை வார்த்து விட்டது |     நேற்றுவரை அவள் தன் காதலி|  காதல் மனைவி என்றென்றும்
இனிய[அ ]வள் அவன் வாழ்க்கைத் துணைவி |
உறங்கிப் போன அவளை ஏக்கப் பெருமூச்சுடன் நெருங்குகிறான் |

                        கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே
என்று அவளுக்குள் நெகிழ்கிறாள் ;அவனால் ஸ்பரிசிக்கப்பட்டதால் ,,,,
                                                 துயில் கலைகிறாள்
                                                 துகில் விலகுகிறது
முகில் நிலவை மறைப்பது போல் அவள் நிலவு முகம் அவன் முகத்தால் மறைக்கப்படுகிறது
அவள் அவனை முத்தமிடுகிறாள் | முத்தமிட்ட அவளிடம்
உதட்டினில் இனிக்கிறதே கொடுத்தது என்ன பழ ரசமா என அவன் வினவ அவளோ
கொடுத்ததைத் திருப்பிகொடு அது என்ன இலவசமா ,,,,,
எனக் கொஞ்சலாய்  ஊடுகிறாள்
அவள் மெல்லிடையை அவன் இறுக அணைக்கிறான்
அவளோ
பண்போடு பண்பாடு
எனக் கெஞ்சுகிறாள்
இப்பொழுதோ
                               அவள் தேகம் அவனின் தேசம்
அவளின் கூந்தல் அங்கே பாயாகிப் போனது |அவர்கள் சேயானார்கள்
ஈருடலும் இதழ் நான்கும் சங்கமிக்கின்றன |
                                       இரவே இரவே விடியாதே
                                       இன்பத்தின் கதையை முடிக்காதே
                                       சேவல் குரலே கூவாதே
                                       சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே
என்று கால தேவனிடம் அந்த அன்பில் கலந்த நெஞ்சங்கள் கெஞ்சுகின்றன
இருவர் அணைப்பிலேயே பொழுதும் புலர்கிறது |
                        ஆனால் நடந்த சல்லாபம்  -சங்கமம் -சம்பவம் ஒன்றை மட்டும் உணர்த்தியது |சங்கமித்த வேளையிலே  உடல்[கள் ] தகித்திருக்கத் தானே வேண்டும் |மாறாகக் குளிர்வித்ததே ,,,, உண்மைதான்
இதைத்தான் வள்ளுவர்

                            நீங்கின் தெறூஉம் குருகுங்கால் தண்ணென்னும்
                            தீயாண்டுப் பெற்றாள் இவள்                                          [1104]

                    காதலிக்காமல் உயிர் வாழ்வதை விட காதலில் தோற்றுப் போவது உயர்வானது என்றான் கவிஞன் டெனிசன் |
                    நீரில் தோன்றும் நிழலல்ல  காதல், தோன்றியவுடன் மறைவதற்கு
அது ஆழமானது ,அழுத்தமானது ,உன்னதமானது ,உயர்வானது|
                                     கோடி மனிதர் பேசிய பின்னும்
                                     குறைவில்லாமல் வளர்வது காதல்
                                     நாடு விட்டு நாடு சென்றாலும்
                                     தேடிச் சென்று சேர்வது காதல்
                இந்தக் காதலில் பிணைந்திருக்கும் காதல் பறவைகள்  ஒன்றை விட்டு ஒன்று     பிரிந்தால் ஏற்படும் இரசாயன மாற்றத்தை தான் வள்ளுவர் அழகாக ஒரு குறளில் கையாள்வார்
காதலர் நீங்கினால் சுடுவதும் சேர்ந்திருந்தால் குளிர்வதும் போன்றதொரு
மாற்றம் காதலருக்குள் ஏற்படுவதாகச் சொல்ல முனைவார்
இதனைப் பாடலாசிரியர் மிக ரசனையாய்
                            நீங்கினால் சுடுவது கூடினால் குளிர்வது
என்று ஒற்றை வரியில் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பார்
பாடல்:சர்க்கரைப் பந்தலில்
படம் :சினிமாப் பைத்தியம்
மற்றொரு காவியப் பாடலில் தோழியும் தலைவியும் ஒரு காட்சி புனையப்பட்டிருக்கும் | அதில்

                                              பன்னீர் நதியில் குளித்து வந்தாலும்
                                              பருவம் தூங்குமே தலைவி
                    எனத் தோழி கேட்க
                                             வெந்நீர் நதியை பன்னீர் எனவே
                                              பேசலாகுமோ  தோழி  
                     எனத்  தன்  விரக தாபத்தைப்  பதிலாய் உரைப்பாள்
ஆம்| பிரிந்து சென்ற காதலனின் பிரிவுத் துயரில்பன்னீர் கூட வென்னீராய்ச் சுடுகிறது  அவளுக்கு |இலக்கிய ரசம் சொட்டும் வரிகள் மூலம் குற ளை   நினைவு கூர்வது கவிஞருக்குப்  பெருமை
பாடல்:தூது செல்ல
படம் :பச்சை விளக்கு
                        இன்னொரு பாடலில்
                                               நினைக்கையில் கொதிப்பாக
                                              அணைக்கையில் குளிராக
                                              இருப்பவள் இளமேனி
                                             எந்நாளும் உனக்காக
         என்ற எளிதான வரிகளும்  இனிதாய் விளக்கும்|
பாடல்: கொஞ்ச நேரம்
படம் : சிரித்து  வாழ வேண்டும்


இதே பொருளை மற்றொரு குறளில்  வேறுவிதமாய் உணர்த்துவார் வள்ளுவர்
அது
                                     தொடிற்கடின்  அல்லது காம நோய் போல
                                     விடிற்கடல்  ஆற்றுமோ தீ                                  [1159]
                    நெருப்பு தொட்டால் தான் சுடுகிறது|ஆனால் தலைவரிடம் கொண்ட பிரிவுத்துயரோ அவரை அணுகினால் சுடாது விலகிச் சென்றால் சுடுகின்றது |
என்று பொருள் தரும் |
மேற்சொன்ன குறள்களை
                              நல்ல கோடைகால நேரத்திலும் குளிரடிப்பதேன் -உடல்
                              குளிரடிக்கும் வேளையிலும் கொதித்திருப்பதேன்
           என்ற பாடல் வரிகள் அப்படியே பிரதிபலிக்கும் |
பாடல்: கண்பட்டது கொஞ்சம்
 படம் :தாலி பாக்கியம்
இன்னொரு பாடலிலோ
                           கிட்டே சென்று தொட்டால் குளிரும் புது நெருப்பு -நாம்
                           எட்டிச் சென்றால் சுடும் நெருப்பு என்ன நெருப்பு ?
என்று அவள் வியக்க
                           ஓட்டும் இரு உள்ளம்தன்னில் பற்றிக்கொண்டது -அந்த
                           புத்தம் புது நெருப்பைத்தானே காதல் என்பது ,கவிஞர் சொன்னது
       என்று பதிலுரைப்பாள்
பாடல் :படிக்க வேண்டும்
படம் :தாயில்லாப் பிள்ளை


































No comments:

Post a Comment