Saturday 30 January 2016

Ayiram azakiyar parthathundu -ஆயிரம் அழகியர் பார்த்ததுண்டு

                   ஆயிரம் அழகியர் பார்த்ததுண்டு 
         செவ்வரி ஓடிய   கண் களிரண்டினில் சேலோடு வேலாட ;-இரு
         கொவ்வை இதழ்களும்  கொத்து மலர்களும்  கொஞ்சி மகிழ்ந்தாட ;
         தெய்வரதத்தினை சேலை மறைத்திட  சிற்றிடை  தள்ளாட ;-நகை
         சிந்து வடித்தவள் பந்து பிடித்தவள்  முந்தி எழுந்தாட

                  இப்படி  எல்லா அழகும் ஒருங்கே அமைந்திட்டபெண்ணானவள் ,தன் காதலன்    தன்னைத் தவிர யாரையும் ஏறிட்டும் பார்த்திடக்கூடாது என எண்ணுவதும் நியாயந்தானே இந்தக் கருத்தைத்தான் வள்ளுவர் புலவி நுணுக்கம் என்ற  அதிகாரத்தில் பத்து குறள்களிலும் வலியுறுத்துகிறார் |
அதில்
                                  யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
                                  யாரினும் யாரினும்  என்று                         [1314]
        வேறு எவரை விடவும் உன்னிடத்தில்தான் காதல் மிகுதி கொண்டுள்ளேன்
என்றால்கூட  ஊடுகிறாள் |வேறு எவரைவிடவும் என்றால்  யார் யாரைவிட ?
என்று பட்டியல் கேட்டு இம்சிக்கிறாள் |
திரைப்பாடலில்
அவன்
                                                   ஆயிரம் அழகியர் பார்த்ததுண்டு
என்று பாட , அவளோ அப்படிச் சொன்னதற்கு ,முகபாவனையில்  அவள் எதிர்ப்பைச்  சொல்வாள்
அதற்கு அவன்
                                                   ஆனால் அவள் போல் பார்த்ததில்லை .............
என்பான் |
                       இது மேற்படி குறளை வலியுறுத்தும் |
            இதே அதிகாரத்தில்  இன்னொரு குறளில்

                                      நினைத்திருந்து  நோக்கினும் காயும்  அனைத்து நீர்
                                      யாருள்ளி நோக்கினீர் என்று                                              [1320]

அதாவது
காதலியின் அழகை அவள் எதிரே நின்று மௌனமாக ரசித்துக் கொண்டிருந்தாலும் கோபிப்பாள் |என்னுடைய அழகையெல்லாம் வேறு  எவளுடைய  அழகுக்கு ஒப்பிட்டுப் பார்த்தீர் ?
என்பதாகப் பொருள் கூறும் |
                            ஜீனத் என் கனவில் வந்தாள்  உன் போலவே
                            சிங்காரப் பாவை உந்தன் வடிவாகவே      [ஆண் ]
                             ஜீனத் அமன் போல என்னை எண்ணி வந்து
                            பாட்டுப் பாடும் துரோகியே                              [பெண்]

                            சும்மா நான் ஜாடை சொன்னேன் கண்ணே கண்மணியே  [ஆண் ]
                            என்னைப் போல் ஒரு பெண்       [பெண்]
                             இந்த உலகில் இல்லை                  [ஆண் ]
                            ஒரு நடிகையைப் போல்
                           என்னைப் பார்த்தது தவறு             [பெண்]
                    என்பதாக அவள் குறளின்  அடிப்படை விளக்கத்தைத் தருவதாக அமைந்து   சுவையூட்டும் |
பாடல்:முதன்  முதலாக
படம் :நிறம் மாறாத பூக்கள்
மேலும் இதே பாடலில் ......
                               சீதா என் காதல் கொடியே .... கண் பாரம்மா
                               ஆதாரம் நீயில்லாமல் வேறேதம்மா
என்று அவன் கெஞ்ச ,  அவளோ
                               ஆசையுடன் நம்பி வந்த பெண்ணை இன்று
                                மோசம் செய்த துரோகியே
என அவள் ஊடல் கொள்வாள்
இந்த வரிகளும் அந்தக் குறளை  அப்படியே நியாயப்படுத்தும்






















No comments:

Post a Comment