Saturday 26 December 2015

Paalo theno =பாலோ தேனோ

                                                           பாலோ தேனோ

                             மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல்  சொல்லாமல் கொள்ளாமல் வருவது காதல் |
                             மென்மையான உணர்வலைகளில் உருவாவதே இந்தத்  தூய்மையான   காதல் |
                                இதைத்தான் ஆங்கிலேயக் கவிஞன் ஒருவன் gentle rain என்று வருணிப்பான் |
                                இப்படி உள்ளக் களிப்பில் இருக்கும் அவனுக்கு அவள் வாய்மொழி சர்க்கரையாய் தேனாய் பாலாய் இனிப்பதில் வியப்பில்லைதான் |
                                  இதனைத்தான் வள்ளுவர்

                                   பாலொடு தேன் கலந்தற்றே  பணி மொழி
                                   வாலெயிறு ஊறிய நீர்                                                         [1121]
                                                                                                                            என்பார்
                                        கனிவான மொழிகளைப் பேசுகின்ற அவளுடைய தூய்மையான பற்களில் ஊறிய நீர் பாலோடு தேன்கலந்த சுவையை உடையதாகப் பொருள் கூறும் |

இதனைத்தான்
                                    சித்திர விழிகள் என்ன மீனோ மானோ
                                    செவ்விதழ் வடித்ததென்ன பாலோ தேனோ
                                    முத்திரைக் கன்னங்கள் என்ன பூவோ பொன்னோ
                                    மோகத்தில் துடித்ததென்ன நீயோ நானோ
என்ற திரைப் பாடல் வரிகள் நினைவு கூறும்

பாடல்:வெள்ளிக்கிண்ணம்
படம்   :உயர்ந்த மனிதன்
விவேக சிந்தாமணிப் பாடல் ஒன்று
                        வண்டு மொய்த்தனைய கூந்தல் மதன பண்டாரவல்லி
                        கெண்டையோடு ஒத்த கண்ணாள் கிளிமொழி  ஊறல்
                         கண்டு சர்க்கரையோ தேனோ கனியொடு கலந்த பாலோ        10

              வண்டுகள் மொய்த்திருப்பது போன்ற கரிய கூந்தலை உடைய காமக்  கருவூலக் கொடி எனும் பெயரும் உடைய ,மீன் போலும் கண்களை உடைய
அவளின் கிளிமொழி பேசும் வாயின் ஊறல்,எச்சில் ,கற்கண்டோ ,,சர்க்கரையோ ,தேனோ ,பழத்தோடு கலந்த பாலோ தெரியவில்லையே  எனப் பொருள் விளக்கம்
இந்த விவேக சிந்தாமணிப் பாடலை ஒத்த  மேற்படி குறளை  திரைப்படப் பாடலொன்று
                           செந்தமிழ்த் தென் மொழியாள் -நிலாவெனச்
                            சிரிக்கும் மலர்க் கொடியாள்
என்று விளக்கும்
பாடல்:செந்தமிழ்த் தென் மொழியாள்
 படம் :மாலையிட்ட மங்கை 
மேலும்,
                                     சிந்தும் செந்தேனும் சொல்லில் ஊறுமே 
                                      தென்றல் வீசியே நன்றி கூறுமே 
என்ற பாடலும் 

படம்  :புனர்ஜென்மம் 
பாடல்:உள்ளங்கள் ஒன்றாகி 

                                      அமுதும் தேனும் எதற்கு -நீ 
                                      அருகினில் இருக்கையிலே எனக்கு 
பாடல்:அமுதும் தேனும் எதற்கு 
படம் : தை பிறந்தால் வழி பிறக்கும் 
                                       என்ற பாடலும் குறளுக்கு இன்னும் சுவை சேர்க்கும் 
                              கற்கண்டு பாகு ,கனிரசத் தேனும் 
                              கசந்திடும் உன்மொழியாலே 
என்ற பாடல் மூலம் குறளுக்கு இன்னும் சுவை சேர்ப்பார் பாடலாசிரியர் 
பாடல்:சிற்பி செதுக்காத 
படம்  :எதிர் பாராதது 
                          பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும் 
                           ஏன் என்று தேன்  வாடுமே 
                           நூலென்ற  இடை இன்னும் நூற்றாண்டு சென்றாலும் 
                           தேர் கொண்ட ஊர்கோலமே 
என்ற பாடல் வரிகளும் பிரதிபலிக்கும் 
பாடல் :பார்வை யுவராணி 
படம் :சிவந்தமண் 












No comments:

Post a Comment