கூடல் சுகமானது
திரைப்படப் பாடல்கள் வரிசையில் ..............
அத்திக்காய்,ஆலங்காய் என காய்களை வரிசைப்படுத்தியும் , பார்த்தேன் சிரித்தேன் என தேன்[சுவை] களை வரிசைப்படுத்தியும் , இன்னும் மாதங்களை நிறங்களை யெல்லாம் வரிசைப்படுத்தி வார்த்தை விளையாட்டில் பாடல்களைச் சுவைக்கச் செய்வார்கள் [திரைப்பட] பாடலாசிரியர்கள் |இங்கே
கிசமைகளை வரிசைப்படுத்தியிருப்பது இன்னும் சுவையாக இருக்கும்
அவற்றில்
ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவைப் பழமாக
என்றும்
தேடிவந்த திங்கள்
திங்களில் செவ்வாய்
செவ்வாயில் வெள்ளி
என்றும்
திங்கள் முகத்தில் அருளேந்தி
செவ்வாய் இதழில் நகையேந்தி
எனக் கிழமை வரிசைக்குச் சுவை சேர்க்கும்
இருமணம் ஒன்றும் திருமணத்தாலே , இணையே இல்லாத இல்வாழ்விலே ,
தேவைதன்னை உணர்ந்தே சேவை செய்து மகிழ்ந்தே சிறந்த இல்லறம் காணுகின்றாள் அந்த இல்வாழ்க்கைத் துணைவி ,இல்லறம்[ இன்னும் ] நல்லறமாய் விளங்க ,கூடலில் ஊடல் இன்னும் சுவை சேர்க்கும் என வள்ளுவர் வலியுறுத்துவார்
அவளோ புதிதாய் மணம் புரிந்த வாழ்க்கைத்துணைவி தன கணவனை எதிர்பார்த்து மஞ்சத்தில் காத்திருக்க , துணைக்கு வந்து ,வரப்போகும் கூடலுக்கு சுவை சேர்க்கிறது
மல்லிகை முல்லை வாருங்கள் -என்
மலரணை தனிலே சேருங்கள்
நாங்கள் துள்ளி எழுந்து ஆடிடும் போது
துவண்டு விழுந்து வாடுங்கள் ........ என மஞ்சத்திற்கு
மலர்களைத் துணைக்கு அழைத்துவிட்டு ,தாங்கள் கூடி, மகிழ்ந்து குலாவிடும் போது அந்த மலர்களின் நிலையை அவை வாழ விடுவதையும் துவண்டு விடுவதையும் எண்ணி எள்ளி நகையாடுவது கவிஞரின் சிறப்பு}
இப்படியே தன் கணவனைக் கூடுதலுக்கு எதிர்பார்த்துக் காத்திருக்க
வள்ளுவரோ
ஊடுதல் காமத்திற்கு இன்பம் - அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின் [1330]
என தனது கடைசிக் குறளில் சொல்வார்
ஊடல் கொள்வது காமத்திற்கு இன்பம் |அந்த இன்பத்திற்கு இன்பம் சேர்ப்பது
கூடித்தழுவுவதே ஆகும் , எனப் பொருள் படும் |
இதையே திரைப்பாடலொன்று ,
ஊடல் கொஞ்சம் நடுவில் வந்தால்
கூடல் சுகமானது
என ஆழமாகவும் அழுத்தமாகவும் குறளை நினைவு கூறும் |
பாடல்:கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்
படம் :லலிதா
மேலும் அதே பாடலில்
மஞ்சள் போனால் ,திலகம் கலைந்தால்
வாழ்வை இழந்தாள் என்பார்
பள்ளியறையில் இரண்டும் கலைந்தால்
பாவை வாழ்ந்தாள் என்பார்
என்ற வரிகளில் இல்லறத்தையும் வாழ்வை இழந்து விதவைக் கோலம் அடைவதையும் ஒரே பொருள் உரைக்கச் [செய்வது] சொல்வது பாடலுக்கும் கவிஞருக்கும் தனிச் சிறப்பு | மற்றொரு பாடலில் ஊடலைக் கூடல் விஞ்சுவதை
ஊடல் கொண்ட பெண்மை இங்கு தனியே நின்றது
கூடல் கொண்ட மன்னன் உள்ளம் அருகே வந்தது
அழகாய்ச் சொல்லும்
பாடல்: உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
படம் : அவளுக்கு என்று ஒரு மனம்
இப்படி எத்தனையோ பாடல்களின் வரிகள் ஊடலின் சிறப்பைச் சொன்னாலும்
ஊடல் என்பது காதலின் கெளரவம்
என்று ஒற்றை வரியில் வள்ளுவனின் திறனைச் சொல்லி அந்தக் குறளையே கௌரவப் படுத்தும் இந்தப் பாடல் வரி |
பாடல்: பொன்மானே
படம் : ஒரு கைதியின் டைரி

No comments:
Post a Comment