மலர்க் கண்கள்
பெண்ணின் அழகிய விழிகளை ;
சித்திர விழிகள் என்ன மீனோ மானோ -என்றும்
கண்ணிலே இருப்பதென்ன கன்னி இள மானே
காவியமோ ஓவியமோ கன்னி இள மானே -என்றும்
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம் -என்றும்
கண்களில் நீலம் விளைத்தவளோ :அதைக்
கடலினில் கொண்டு கரைத்தவளோ -என்றும்
முள்ளில் ஆடும் பெண்மை
கள்ளில் ஊறும் கண்கள் - என்றும்
வேலாலே விழிகள் -இங்கு
ஆலோலம் இசைக்கும் - என்றும்
கண்ணுக்குள்ளே கெழுத்தி
வச்சிருக்கா ஒருத்தி யப்போ யப்போ
கண்ணிவெடித் திரியை
வச்சிருக்கா கொழுத்தி யப்போ யப்போ - என்றும்
குவளை ரெண்டு மலர்ந்ததென் று
கண்களைத் தொட்டார்
என்றெல்லாம் கவிஞர்கள் வர்ணனை செய்வர்
அவர்களுக்கெல்லாம் மானாய் , மீனாய் ,காவியமாய் ,ஓவியமாய்,
கடலாய், வானமாய் ,வில்லாய் ,அம்பாய் ,நீலமாய், குவளையாய்த் தெரிந்த
அவளின் விழிகள் வள்ளுவருக்கு இகே மலராய்த் தெரிகிறது
மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர் காணும் பூவொக்கும் என்று [1112]
மலரைக் கண்டால் மயங்கிப் போகும் நெஞ்சமே !அம்மலர்கள் இவளுடைய கண்களை ஒத்திருக்க , மலர் எது கண் எது என்று மயங்கிப் போகிறாய் எனப் பொருளுரைக்கிறது |
திரைப்பட பாடலோ
மலர் எது என் கண்கள் தானென்று சொல்வேனடி
கனி எது என் கன்னம் தானென்று சொல்வேனடி
பாடல் : மலர் எது
படம் :அவளுக்கென்று ஓர் மனம்
லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
பெண்ணைப் பார்த்ததிலே
என்ற பாடல் மூலம் குறளை நினைவு கூர்வார்
பாடல் ; லில்லி மலருக்கு
படம் ; உலகம் சுற்றும் வாலிபன்
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
என்று மலரை விடவும் கண்களைச் சிறப்பாகக் காட்டுவார்
பாடல் ;ஒரு பெண்ணைப் பார்த்து
படம் ;தெய்வத் தாய்
இன்னும்
அழகுக்கு மறு பெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறு பெயர் கண்ணா
என்று அழகாய் ஒப்புவமைப் படுத்தும்
இதே கருத்தை இன்னும் சிறப்பாய்க் கையாள்வார் வள்ளுவர் மற்றொரு
குறளில் . அது
காணிற் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும்
மாணிழைக் கண்ணொவ்வோம் என்று [1114]
அதாவது இவளது கண்களைப் பார்த்து குவளை மலர்கள் தலை குனிந்து
நிலத்தைப் பார்க்கின்றன எனப் பொருள்படும்
ஒரு பாடலில் தன பேத்தியிடம் இறந்துபோன தன மனைவியின் அழகை [கண்களை] நினைவலைகளில் நிறுத்தி அசை போடுவதாய் அமைந்த உரையாடலில்
ஒரு மலர்க் காட்சியில்தான் [முதலில்] அந்த
நந்தவனத்தைச் சந்தித்தேன்
அந்த மலர்க் [கண்]காட்சியில் அழகான பூவே
அவள் மட்டும்தான்
பூக்கள் எல்லாம் அவள் முகம் காண
நாணிக் கோணி , குனிந்து கொண்டன
என நம்மை மெய் சிலிர்க்க வைப்பதுடன் அந்தக் குறளின் வரிகளை
அப்படியே உணர்த்துவார் பாடலாசிரியர் .
பாடல் ;அன்புள்ள அப்பா
படம் ;அன்புள்ள அப்பா

No comments:
Post a Comment