Saturday, 14 November 2015

PEN MANATHU = பெண் மனது

                                                                   பெண் மனது

                            இல்லறத்தில் நல்லறத்தைத் தேடும்  வாழ்க்கை துணை நலன் தான் பெண் |
             மாமேதைகளையும் ,  தலைவர்களையும் , ஏன் , புனிதர்களையும்
ஈன்றெடுத்தது பெண் குலம் |
               ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் நிற்பவளும் இதே பெண் தான் |
                இந்தப் பெண்ணுக்குள்ளும் அதிசயிக்கத் தக்க ஒரு குணம் உண்டு  அதுதான் பெண் மனதின் ஆழம் | இதைக் கண்டு கொண்டார் உலகிலே யாரும்
இல்லை எனலாம் | இந்தக் கருத்தினைதைத் தான்

                                               அலுக்கி குலுக்கி ஒதுங்கி நின்றால்
                                               அருகில் ஓடி வாரும் என்றே ,
                                                வலியப் பேசி வாரும் என்றால்
                                                வந்த வழியைப் பாரும் என்றே

                                                 வஞ்சியரின்  வார்த்தையிலே
                                                அர்த்தமே வேறுதான்
                                                அர்த்தமெல்லாம்   வேறுதான்
                                                அகராதியும் வேறுதான்
பாடல் : முடியும் என்றால்
படம் : மிஸ்ஸியம்மா
    என்றுஒரு  பாடல் விளங்கச் சொல்லும்
மற்றொரு பாடலோ  மிகத் தெளிவாகவே சொல்கிறது 

                                       கடிகார முள்ளின் நடை போல  -உள்ளம் 
                                       கணம் ஓர் இடம் செல்லும் புவிமீது 
                                       கடலாழம் கண்ட பெரியோரும் பெண்ணின் 
                                       மனதாழம் காண முடியாது 

பாடல்:முடியாது நம்ப முடியாது 
படம் : குலதெய்வம் 

                                  இதைத்தான்  விவேக சிந்தாமணி ,

                       அந்தியின் மலரும் ,வெள்ளை யாக்கைகொள் காக்கை தானும் 
                        பித்தர்தம் மனமும்  நீரிற்பிறந்த மீன் பாதம் தானும் 
                        அத்தர் மால் பிரம்ம தேவனால் அளவிடப்பட்டாலும் 
                         சித்திர விழியார் நெஞ்சம் தெரிந்தவர் இல்லை கண்டீர் 

                           பூமலராத அத்தி மரத்தின் பூவையும் வெள்ளை நிற  உடலுடைய காகத்தையும் , பைத்தியம் பிடித்தவர்கள் மன நிலையையும் ,தண்ணீரில்  நீந்தும் மீனின் பாதத்தையும் தாணுமாலயன் முதலியோர் கண்டறிய முடிந்தாலும் முடியலாம் | அழகிய கண்களுடைய ஆரணங்குகளின்  உள்ளத்தில் உள்ளதை யாராலும் கண்டறிய முடியாது |
                  ஆம் , கடலின் ஆழத்தைக் கூடக் கண்டறியலாம் ,பெண் மனதின் ஆழத்தைக்  கண்டறிய  முடியாது எனப்  பொருள் விளக்கம் தரும் |

 இதனைப் பாடலிலோ ............
                                        பெண்  மனது  ஆழம் என்று                                                                                                             ஆம்பளைக்குத் தெரியும் -அது 
                                        பொம்பளைக்கும் புரியும் - அந்த 
                                        ஆழத்திலே என்ன உண்டு 
                                        யாருக்குத்தான் தெரியும் -அது 
                                        யாருக்குத்தான் புரியும் |
பாடல்: பெண் மனது 
படம்: என் ராசாவின்  மனசிலே 

இன்னொரு பாடலில் .....

                                        ஆறும் அது ஆழமில்ல  - அது 
                                        சேரும் கடலும் ஆழமில்ல 
                                        ஆழம் எது அய்யா -இந்த 
                                        பொம்பள மனசுதான்யா  -  அடி 
                            அம்மாடி அதன் ஆழம் பார்த்ததாரு -அடி ஆத்தாடி 
                                        அதப் பார்த்த பேரக் கூறு நீ....
               என்று அப்படியே   விவேக சிந்தாமணிப்  பாடலை  விளக்கும்

பாடல் : ஆறும் அது 
படம் : முதல் வசந்தம் |

இதே கருத்தினைப் பாட வந்த காதலி
                              அன்பு செய்தால் அமுதம் அவளே 
                               வம்பு செய்தால் விஷமும் அவளே 
பாடல் :உன்னை விட மாட்டேன் 
படம் :அலிபாபாவும் 40 திருடர்களும் 


இதே கருத்தினைப் பதீவு செய்யம்  காதலன்

                             உயிர் வாழ்வதா  இல்லை வீழ்வதா?
                             அமுதென்பதா விஷம் என்பதா?-இல்லை 
                             அமுத விஷம் என்பதா ?
பாடல்:காதலே 
படம் : டூயட் 
என்று அவள் மனதின் ஆழம் தெரியாமல் குழம்புகிறான் ,புலம்புகிறான்|

ஆனால் அவளோ
                                பொங்கு கடலின் ஆழம் தன்னை 
                                புரிந்துகொள்ளல் மிகவும் எளிது 
                               பெண்கள் நெஞ்சின் ஆழம் தன்னை 
                               இங்கு யாரும் காணல் அரிது 

பாடல் :உன்னை விட மாட்டேன் 
படம் :அலிபாபாவும் 40 திருடர்களும் 
என்று விவேக சிந்தாமணிப் பாடலை நினைவூட்டுகிறாள்































No comments:

Post a Comment