மண்ணை நீ பார்கின்றாயே
தேனுரிமை கொண்டாடும் செவ்வரளிப்பூவிதழை
நானுரிமை கொள்ள வந்தால் என்ன கொடுப்பாய்
என்று அவன் கேட்க
தேன்துளிகள் அத்தனையும் கேட்டதனால் நானெடுத்து
சிந்தாமல் சிதறாமல் அள்ளிக் கொடுப்பேன்
என்பதாக அவள் பதிலுரைப்பாள்
இந்த இள நெஞ்சங்களின் சங்கமத்தில்தான் எத்தனை எத்தனை சம்பாஷனைகள் சல்லாபங்கள் | இருந்தாலும் பெண்மைக்கே உரிய நாணம் அங்கே எட்டிப் பார்க்கிறது |அவன் விழிக் கணைகளை காண நாணமுற்று நிலத்தை நோக்கி அவள் பார்வை சற்றே கவிழ்கிறது |இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை
யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும் [1094]
நான் விரும்பிப் பார்த்தபோது , நாணி நிலத்தை நோக்கிக் குனிந்த இந்தப் பெண் ,பார்க்காத போது ,என்னைப் பார்த்துத் தன்னுள் சிரிக்கின்றாள்
என்று பொருள் படும்
திரைப் படப் பாடலோ .......
உன்னை நான் பார்க்கும்போது
மண்ணை நீ பார்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும்போது
என்னை நீ பார்கின்றாயே
என்று குறளை ஒட்டி எழுதப்பட்டிருக்கும் அந்தப்பாடலில் மேலும் சில வரிகள்
நேரிலே பார்த்தாலென்ன
நிலவென்ன தேய்ந்தா போகும்
புன்னகை புரிந்தாலென்ன
பூமுகம் சிவந்தா போகும்
என்று முத்தாய்ப்பாய் அமைந்திருக்கும் |
பாடல்: நெற்று வரை நீ
படம் : வாழ்க்கைப் படகு
காதல் மயக்கத்திலிருக்கும் அவள் ,அவன்மேல் கொண்ட ஆசையினால் , அவன் தன்னைப் பார்க்கும்போது அவள் மண்ணைப் பார்ப்பதை
வேல்விழிப் பார்வை கால் விரல் பார்த்தால்
சம்மதம் என்றே பொருளாகும்
என்று நாணுவதைப் பாடல் உரைக்கும் |
பாடல் : இப்படியே இருந்து விட்டால்
படம் : தாலி பாக்கியம்
இன்னும்;
ஆசை கனிந்து வர அவன் பார்த்தான்
அன்னம் தலை குனிந்து நிலம் பார்த்தாள்
பாடல்: அந்தப்புரத்தில்
படம் :தீபம்
என்று குறளை அப்படியே கண்முன் சேர்க்கும் |

No comments:
Post a Comment