நிலவு ஒரு பெண்ணாகி
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை -அவள்
கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
என்று கவிஞர்கள் பெண்ணை நிலவுக்கும் அவள் கண்களை மலருக்கும்
ஒப்புவமை சேர்ப்பர்
இங்கே நிலவின் தேய்பிறையை வள்ளுவர்
அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து [1117]
தேய்ந்து , தேய்ந்தபின் வளர்ந்து நிறைந்தும் விளங்குகின்ற நிலாவிடம் இருப்பது போன்ற களங்கம் இந்த மகளிர் முகத்தில் உண்டோ எனப் பொருள்படும்
நிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி
நீந்துகிற குழலோ
எனப் பாடலாசிரியர் சொல்வார்
பாடல்: நிலவு ஒரு
படம் :உலகம் சுற்றும் வாலிபன்
இங்கே ஒரு பாடலில்
ஆனந்தப் பூமுகம் அந்தியில் வந்திடும்
சுந்தர நிலவோ
என ஆண் வினவ ,அவளோ
நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகம் என யாரதைச் சொன்னது
என்று சலித்துக் கொள்வாள்
பாடல்: இதழில் கதை
படம் : உன்னால் முடியும் தம்பி
நிலவுக்கும் அவள் முகத்திற்கும் வேறுபாடு காண முடியாமல் தவிப்பதை
விவேக சிந்தாமணிப் பாட ல் ஒன்று
மாகமா மேடை மீதில் மங்கை நின்றுலாவக் கண்டு
ஏகமா மதியென்றெண்ணி இராகு வந்துற்ற போது
பாகு சேர் மொழியினாளும் பற்றியே பாதம் வாங்கத்
தோகைமாமயில் என்றெண்ணித் தொடர்ந்த இராகு மீண்டதன்றே
வானுற உயர்ந்த ,விசாலமான மேன்மாடத்தில் வந்து உலவிக் கொண்டிருந்த பெண்ணைக் கண்ட இராகு எனும் கோள் , அவள் முகத்தை நிலவு என்று நினைத்துக் கொண்டு கவ்வ நெருங்கியது |இராகு எனும் பாம்பு நெருங்குவதைக் கண் டு பயந்த , தித்திக்கும் மொழி பேசும் பெண்ணழகி இவள் ,அடி வைத்து நடப்பதைக் கண்டு ,அவள் தோகை மயிலின் சாயல் உடைய பெண் , நிலவல்ல என்று கண்டு இராகு திரும்பிப் போயிற்று
என்று பொருள் விளக்கம் தரும்
பாடல் ஒன்றில்
கன்னத்தில் காயம் என்ன வெண்ணிலாவே -உன்
காதலன்தான் கிள்ளியதோவெண்ணிலாவே
என்று நிலவின் களங்கத் தைச் சொல்வான்
பாடல்: என்னருமைக் காதலிக்கு
படம்: எல்லோரும் இந்நாட்டு மன்னர்
இன்னும் சிறப்பாய் ஒரு பாடலில்
குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஓடும்
முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும்
அருமையாய் விளக்கம் தரும்
பாடல் :அதோ மேக ஊர்வலம்
படம் ஈரமான ரோஜாவே

No comments:
Post a Comment