Wednesday, 11 November 2015

THULLUM KAYAL POLE- துள்ளும் கயல் போலே

                                                           துள்ளும் கயல் போலே 
                                        கொடுத்துப் பார் பார் பார்  உண்மை அன்பை 
                                         நினைத்துப்பார்  பார் பார் அதன் தெம்பை 
                                         உயர்வு தாழ்வெனும் பேதத்தைப் போக்கும் 
                                         இருவர் வாழ்வினில் இன்பத்தைச் சேர்க்கும் 
                இப்படி பேதம் பார்க்காத காதல்தான் உண்மைக் காதல் |
                                       
                                          மலைமேல் நின்று கலைமான் ஒன்று -உன் 
                                          விழிபார்த்து விளங்காமல் வழி  மாறும் -என்று 
                            அழகியளாலின் விழியை வர்ணிப்பான் காதலன் |
                    இங்கே விவேக சிந்தாமணியின்  பாடல் ஒன்று 
                                        தண்டுலாவியர் தாமரைப் பொய்கையில் 
                                        மொண்டுநீரை முகத்தரு கேந்தினாள் 
                                       கெண்டை கெண்டை எனக் கரை ஏறினாள் 
                                       கெண்டை காண்கிலன் நின்று தயங்கினாள் 
                 கொடிகள் படர்ந்த  தாமரைக்குளத்திலே இறங்கிய ஒரு பெண்  குளத்து நீரை இரு கைகளாலும் அள்ளி எடுத்துத் தன்  முகத்தருகே கொண்டு போனாள் 
கொண்டு போனவள்  கெண்டை கெண்டை என அலறிக் கொண்டு கரைக்கு ஓடினாள் |அங்குபோய் நின்று பார்த்துவிட்டு கெண்டையைக் காணாது திகைத்து நின்றாளாம் 
                            உள்ளங்கையில் அள்ளிய நீரை உற்றுப்பார்த்த போது அதில் தெரிந்த இரு கண்களையும் கெண்டை மீன் என்று நினைத்துக் கொண்டு 
கரை ஏறினாள் |அவ்வாறு கரை ஏறும்போது கையில் உள்ள நீர் ஒழுகிப் போனதால் கெண்டை மீன் தெரியவில்லை எனவே திகைத்துப் போய்விட்டாள் |
                               தண்ணீரில் அவள் கண்களின் பிம்பம் மீன்களாய்த்தெரிவதாய் உணர்த்துவார் கவிஞர் |
இதனைத் திரைப் பாடல் ஒன்று 
                              வெள்ளியலை மேலே துள்ளும் கயல் போலே 
                              அல்லிவிழி  தாவக் கண்டேன் என் மேலே 
                                                            என்று சொல்லுவார் 
பாடல் :முல்லை மலர் மேலே 
படம் : உத்தம புத்திரன் 
             இன்னொரு பாடலில் 
                                  உந்தன் மீன் விழிகளைக் காணும் நதியில் 
                                  மீன்களும் துள்ளி ஆடுதே 
பாடல்: மாசிலா நிலவே நம் 
படம் :அம்பிகாபதி 
                   இன்னும் 
                                   சிறு மணல் வீட்டில் குடியேறும் நண்டானது 
                                    இவள் கண் பார்த்து மீன் என்று திண்டாடுது 
                                                    என்று சிறப்பாய்ச் சொல்லும் 
பாடல் : கடலோரம் வாங்கிய காற்று 
படம்: ரிக்ஷாக்காரன் 











































































No comments:

Post a Comment