பெண் தெய்வம்
காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்
என்ற பாட்டுகொரு புலவன் பாரதியின் வரிகளை
காதலே இல்லையேல் உலகிலே
சாதல் ஒன்றே தெய்வீகமே
என்று காதலின் உய ர்வை பாடல் வரிகள் மூலம் எளிதாக உணர்த்துவார் பாடலாசிரியர் |
இந்தக் காதலில் வீழ்ந்து விட்டால் காதலிக்குக் காதலனும், காதலனுக்குக் காதலியும் தெய்வமாய்க் காட்சி தருவர் போலும் | இதைத்தான் வள்ளுவர்
அணங்கு கொல் ஆய்மயில் கொல் கனங்குழை
மாதர் கொல் மாலும் என் நெஞ்சு [1081]
இப்பெண் தெய்வ மகளோ ? அன்றி சிறந்ததொரு மயிலோ ? மானிடப் பெண்ணோ? இவள் யார் என்று அறிய முடியாமல் என் நெஞ்சு மயங்குகிறது ,
என்று பொருள் தரும் |
ஆழியிலே பிறவாத அலை மகளோ
ஏழிசையைப் பயிலாத கலை மகளோ
ஊழி நடம் புரியாத மலைமகளோ
உலகத்தாய் பெற்றெடுத்த தலைமகளோ
என்ற பாடலில் அவனுக்கு அவள் அலைமகளாய் ,கலைமகளாய் ,மலைமகளாய் ,தலைமகளாய்க் காட்சி தருகிறாள் மேலும் இதே பாடலில்
அழகு தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ
என தெய்வமாகவே காட்சி தருவதாய்ச் சொல்வது இந்தக் குறளை அப்படியே நினைவு கூறும் |
இனி வரும் இந்தப்பாடலிலோ ஒரு பெண்ணுக்கு ஆண் தெய்வமாகத் தெரிகிறான்
எ ன் வாழ்வில் கண்ணே உன்போலவே
மண் மீதிலே வேறு பெண் ஏதம்மா
என காதலின் ஆழத்தை உணர்த்த வந்த அவனுக்கு
இன்பம் மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே
என் ஆசைக் கண்ணா நீ என் தெய்வமே
என அவனுக்குப் பதிலுரைப்பது குறளின் ஆழத்தை அப்படியே உணர்த்தும்
பாடல்: ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
படம் :மக்களைப் பெற்ற மகராசி
மேலும்
கண்படுமே பிறர் கண்படுமே
நீ வெளியே வரலாமா ...உன்
கட்டழகான மேனியை ஊரார்
கண்ணுக்குத் தரலாமா
புண்படுமே புண்படுமே ..நீ
புன்னகை செய்யலாமா
பூமியிலே தேவியைப் போல்
ஊர்வலம் வரலாமா
என்ற பாடலில் அவள் தேவியாய்த் தெரிவதும்
பாடல்:கண்படுமே
படம் :காத்திருந்த கண்கள்
எந்தன் மனக் கோயிலில் தெய்வம் உனைப் பார்க்கிறேன்
உந்தன் நிழல் போலவே வரும் வரம் கேட்கிறேன்
என்ற பாடலில் அவளுக்கு அவன் தெய்வமாய் தெரிவதும் குறளின் மகத்துவத்தை மென்மேலும் உணர்த்தும் |
பாடல்: தங்கத்தில் முகமெடுத்து
படம்:மீனவ நண்பன்
இன்னொரு பாடலிலோ
மேகத்தைக் கூந்தலில் முடித்தவளோ
விண்மீன்களை மலராய் தொடுத்தவளோ
மோகத்திலே இந்த உலகம் யாவையும்
மூழ்கிடச் செய்யும் மோகினியோ
என அவன் வியப்பது மேலும் குறளை நினைவு கூறுமாறு அமையும்
பாடல் :செந்தமிழ்த் தேன் மொழியாள்
படம்:மாலையிட்ட மங்கை

No comments:
Post a Comment