புலவி நுணுக்கம்
காதலுக்கு ஜாதிஇல்லை மதமுமில்லையே
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதம் இல்லையே
என்றும்
அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை -நெஞ்சில்
ஆசைக்கும் உறவுக்கும் பேதமில்லை
என்றும்
ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசைகிளியே அழகிய ராணி
அருகே வரலாமா ,,,,,,,,,,,,,,
ஏழை என்றாலும் ராஜ குமாரன்
ராஜா மகளின் காதல் தலைவன்
என்றெல்லாம் வேற்றுமையில் ஒற்றுமை காணத் துடிக்கும் காதலர்க்கு
ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்
உள்ளத்தை நன்றாய் புரிந்து கொண்டால்
இருவர் என்பது மாறிவிடும்
இரண்டும் ஒன்றாய் கலந்து விடும்
இங்கே ஊடல் கொள்ளும் பெண்டிரோ ஒற்றுமையில் வேற்றுமை காண்பர் |
இதைத்தான் வள்ளுவர் புலவி நுணுக்கம் என்ற அதிகாரத்தில் அழகாய்ச் சொல்வார்
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கு நீர்
இந்நீர் ஆகுதீர் என்று [1319]
காணும் அழகையெல்லாம் , அந்தக் கன்னிகைக்கு உவமையாய்ச் சொன்னாலும் போதாது என்று ஊடல் கொள்வாள் | இதை,
தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
என்று அவள் கூந்தலை கார்மேகத்திற்கு ஒப்புவமையாய்ச் சொல்லி
அக மகிழ்வான் |அதற்கு அவளோ,
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் -அந்த
மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
என்று அங்கலாய்ப்பாள் |அவ்ளின் எகத்தாளத்திற்கு அவன் மேலும்,
அழகைச் சுமந்துவரும் அழகரசி
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ
என இந்த வர்ணணைக்காவது அவள் மனம் சாந்தப் படட்டுமே என்று எத்தனிக்க , அவளோ,
நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யார் அதைச் சொன்னது
என்று இறுமாப்பாய்ப் பதிலுரைத்து ஆசையாய் ஊடல் கொள்வாள்
பாடல்: இதழில் கதை எழுதும்....
படம் : உன்னால் முடியும் தம்பி
இப்படி இந்தக் காவியப்பாடல் வரிகள் அந்த உன்னதக் குறளுக்கு
உவமை கூறும்|
பெண்ணழகு மேனியை தங்கத்திற்கு உவமை கூற வரும் போது
தங்கப் பதக்கத்தின் மேலே ஒரு முத்துப் பதித்தது போலே
என்றும்
அங்கமெல்லாம் தங்கமோ
மன்மதன் ஆடும் சதுரங்கமோ
என்றும்
தங்கம் பாதி வைரம் பாதி அங்கம் என்பதோ
என்றெல்லாம் பாடிச் சென்றனர்|இன்னும் அந்த அழகோவியத்தை வர்ணிக்கும் போது நவரத்தினங்களை உவமை கூறுவான் கவிஞன் |
மாணிக்கத்தேரில் மரகதக் கலசம் மின்னுவதென்ன
என்றும்
முத்து ,பவழம்.முக்கனி ,சர்க்கரை மூடிவைக்கலாமா
என்றும்
இடை தங்கம் நடை வைரம் இதழ் பவழம் நகை முத்து -
நீ விண்ணுலகப் பூந்தோட்டமே
என்றெல்லாம் பாடிச் சென்றான்
அவளோ தன் அழகை
தங்கம் உண்டு மேனியிலே வைரம் உண்டு விழிகளிலே
முத்தும் உண்டு பல்லினிலெ பவழம் உண்டு இதழினிலே
என்று தனக்குத் தானே வர்ணித்து பெருமிதம் கொள்வாள் |

No comments:
Post a Comment