கையிலே வளையலில்லை
நீலச் சேலை கட்டிக் கொண்ட
சமுத்திரப் பொண்ணு
நெருங்கி நெருங்கி பார்ப்பதென்ன
சொல்லடிக் கண்ணு
யாரைக் காணத் துடிக்கிறியோ
கரையிலே நின்னு -அந்த
ஆள் வராமத் திரும்புறியோ
சொல்லடிக் கண்ணு
வளையல்கள் கழன்று விழுமாறு தம் பழைய அழகை இழந்து விட்ட கரங்கள் என் மீது அன்பு செய்யாத கொடியவரின் கொடுமையைப் பிறர் அறியப் பறை சாற்றுகின்றன எனப் பொருள்படும்
இந்தக் குறளின் கருத்தினைத்தான்
முத்தும் மணியும் கருகிடும் வண்ணம் மோகத்தில் ஆழ்ந்த தலைவியிடம் தலைவி
இடையணி மேகலை வீழ்ந்திடும் வண்ணம்
ஏங்கலாகுமோ தலைவி ............என தோழி சீண்ட
தடையிருந்தும் பொருள் கொள்வோரில்லையோ
கலக்கம் வராதோ தோழி
என்று தன பிரிவாற்றாமையைப் பதிலாய்ச் சொல்வாள்|
பாடல்: தூது செல்ல ஒரு
படம் :பச்சை விளக்கு
நீலச் சேலை கட்டிக் கொண்ட
சமுத்திரப் பொண்ணு
நெருங்கி நெருங்கி பார்ப்பதென்ன
சொல்லடிக் கண்ணு
யாரைக் காணத் துடிக்கிறியோ
கரையிலே நின்னு -அந்த
ஆள் வராமத் திரும்புறியோ
சொல்லடிக் கண்ணு
என்றெல்லாம் கடலையும் அதன் அலைகளையும் ரசித்துக் குதூகலித்திருந்த அந்தக் கடற்கன்னி காதல் வலையில் வீழ்ந்து விட்டாள் |காலம் செய்த கோலத்தாலும் விதி செய்த சதியினாலும் வீணர்களின் சூழ்ச்சியினாலும் காதலனைப் பிரிய நேர்ந்தது |காதலின் துயரால் ,காதலனின் பிரிவால் உடல் மெலிவுற்றாள் |அந்த உடல் மெலிவால் கை வளையல்களும் கழன்று விழுகின்றன |
இதைத்தான் வள்ளுவர் ,
துறைவன் துறந்தமை தூற்றா கொல் முன்கை
இறை இறைவா நின்ற வளை [1157]
தலைவன் பிரிந்த செய்தியை என் முன்கையிடத்து இருந்து
கழன்று விழுகின்ற வளையல்கள் உணர்த்தவோ ? நீ அறிவிக்க வேண்டாமோ, எனப் பொருள் கூறுகிறது
இதைத்தான் அந்தக் கடற்கன்னி ,தன நிலைப்பாட்டை
கையிலே வளையலில்லை
கண்ணிரண்டில் தூக்கமில்லை
கட்டியுள்ள ஆடைகளும் ,கடலலையே -என்
சிற்றிடையில் தங்கவில்லை கடலலையே
என சோகம் ததும்பப் புலம்புகிறாள் |சோகத்திலும் தன் இடையைச் சிற்றிடை எனச் சீர் தூக்கிப் பார்ப்பது தனிச் சிறப்பு |
பாடல்:அக்கரையில் அவனிருக்க
படம் : பொற்சிலை
காதலை கவிதையாய் ,காவியமாய்,இலக்கியமாய் இலக்கணமாய்
கவிஞர்கள் சீர் தூக்கிப் பார்த்ததுண்டு | இங்கே காதலை சற்றே வித்தியாசமாக விவசாயத்திற்கு உவமை சொல்வான் கவிஞன் | அது........
கயல்விழி இரண்டில் வயலமைத்து - அதில்
காதல் என்றொரு விதை விதைத்து
காலமறிந்து கதிரறுப்போமா
காவிய உலகில் குடியிருப்போமா ....
என அழகாய்ச் சொல்வான் |இப்படியான காதலையும் காதல் தந்த தோல்வியையும் இதே ரீதியில்
வேரூன்றி வளருமென்று விதை விதைத்தேன் -இரு
விழி போலக் காத்திருந்து நீரும் இறைத்தேன்
பூமுடிக்கும் ஆசை கொண்டு சோலை அடைந்தேன் -அங்கு
புயல் வீசிக் காதல்கொடி சாய்ந்திடக் கண்டேன்
என்றெல்லாம் துயருறுவாள் |
இவளின் இந்த நிலைப்பாட்டைத்தான் வள்ளுவர் மற்றும் ஒரு குறளில்
கொடியாள் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்களின் தோள்களின் வாடிய தோள் [1235]
இவளின் இந்த நிலைப்பாட்டைத்தான் வள்ளுவர் மற்றும் ஒரு குறளில்
கொடியாள் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்களின் தோள்களின் வாடிய தோள் [1235]
வளையல்கள் கழன்று விழுமாறு தம் பழைய அழகை இழந்து விட்ட கரங்கள் என் மீது அன்பு செய்யாத கொடியவரின் கொடுமையைப் பிறர் அறியப் பறை சாற்றுகின்றன எனப் பொருள்படும்
இந்தக் குறளின் கருத்தினைத்தான்
முத்தும் மணியும் கருகிடும் வண்ணம் மோகத்தில் ஆழ்ந்த தலைவியிடம் தலைவி
இடையணி மேகலை வீழ்ந்திடும் வண்ணம்
ஏங்கலாகுமோ தலைவி ............என தோழி சீண்ட
தடையிருந்தும் பொருள் கொள்வோரில்லையோ
கலக்கம் வராதோ தோழி
என்று தன பிரிவாற்றாமையைப் பதிலாய்ச் சொல்வாள்|
பாடல்: தூது செல்ல ஒரு
படம் :பச்சை விளக்கு
No comments:
Post a Comment