அந்தியிலே மயக்கம்
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றார் மகாகவி
காதலுக்கு ஜாதி இல்லை மதமும் இல்லையே என்றார் கவியரசர்
குங்குமம் இடுகின்ற போது -அது
குலத்தினைப் பார்ப்பது இல்லை
சங்கமம் ஆகின்ற வேளை -அது
ஜாதிகள் பார்ப்பது இல்லை |
ஆம். தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒரு பாதையில்
இங்கு சங்கமம் |
ஜாதிகள் பார்க்காத காதல் "கனியில் ஊறிடும் சுவையையும் மீறி
இனிமை தரும்
இந்தக்காதலில் கனிந்தவள் அழகிய இனிய மாலை வேளையில்
விருந்தொன்றைப் பரிமாறினாள்| அதைப் பரிமாறும் போதே
பசியாறினாள் |அப்படிப்பட்டட மாலை வேளையைத்தான் வள்ளூவர்
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலை நீ வாழி பொழுது
பொழுதே நீ வாழ்க , மாலைப் பொழுதா நீ | இல்லை மணம் புரிந்து
பிரிந்து வாழும் உயிரை உண்கின்ற வேலாக அல்லவா இருக்கிறாய் |
அதாவது மாலை வேளை படை போலக் கொல்லும் வேலாய் இருப்பதாக உணர்த்துவார் |
இதையே திரைப்பட பாடலொன்று ......
மாலைப் பொழுது வந்து படை போலக் கொல்லும்
வருவார் வருவார் என்ற சேதியும் சொல்லும்
ஆலிலை போன்ற உடல் ஆசையில் துள்ளும்
அந்தியிலே இயற்கை என்னையும் வெல்லும்
பாடல் :அன்புள்ள அத்தான்
படம் :கைராசி
முதல் வரியில் மாலைப் பொழுது அவளைக் கொல்வதாகவும்
கடைசி வரியில் அவளை வெல்வதாகவும் சொல்லியிருப்பது
பாடலுக்குச் சுவை சேர்க்கும் |
இக்கருத்தினை வள்ளுவர்
காலைக்குச் செய்த நன்று என்கொல் எவன் கொல்யான்
மாலைக்குச் செய்த பகை
காலைப் பொழுதுக்கு நான் செய்த நன்மை என்ன ? என்னைத்துன்புறுத்தும்மாலைப் பொழுதிற்கு நான் செய்த தீமைதான் என்ன? என்பதாய் விளக்கம் தரும்
ஒரு பாடலில்
மாலைக்கு நான் செய்த தீமை என்ன ?-அதி
காலைக்கு நான் செய்த நன்மை என்ன?
என்பதாய் குறளை அப்படியே நினைவூட்டும்
பாடல் :நாளொன்றும் பொழுதொன்றும்
படம்: கல்யாணியின் கணவன்
என்றும்
மற்றொரு பாடலில்
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
பாடல் :நாளை இந்த வேளை
படம் :உயர்ந்த மனிதன்
என்றும்
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி
பாடல்:மாலைப் பொழுதின்
படம் :பாக்ய லட்சுமி
என்றும்
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
பாடல் : மயக்கும் மாலை
படம் :குலேபகாவலி
என்றும்
பாடல்: மாலையும் இரவும்
படம் :பாசம்
இன்னும்.....
இதழில் கதை எழுதும் நீரமிது
மனதில் சுகம் மலரும் மாலையிது
பாடல் :இதழில் கதை எழுதும் நீரமிது
படம் : உன்னால் முடியும் தம்பி
என்று சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும்
அந்தியில் மயங்கி விடும் காலையில் தெளிந்து விடும்
அன்புமொழி கேட்டுவிட்டால் துன்ப நிலை மாறிவிடும்
பாடல் :அமைதியான நதியினிலே ஓடம்
படம் :ஆண்டவன் கட்டளை
என்பதாய்க் குறளைத்தழுவி கனிந்துருகுவாள் அந்த காவியத் தலைவி

மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்
மயங்கிய ஒளியினைப் போலே
மன மயக்கத்தில் வந்தவள் நீயே
பாடல்: மாலையும் இரவும்
படம் :பாசம்
இன்னும்.....
இதழில் கதை எழுதும் நீரமிது
மனதில் சுகம் மலரும் மாலையிது
பாடல் :இதழில் கதை எழுதும் நீரமிது
படம் : உன்னால் முடியும் தம்பி
என்று சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும்
அந்தியில் மயங்கி விடும் காலையில் தெளிந்து விடும்
அன்புமொழி கேட்டுவிட்டால் துன்ப நிலை மாறிவிடும்
பாடல் :அமைதியான நதியினிலே ஓடம்
படம் :ஆண்டவன் கட்டளை
என்பதாய்க் குறளைத்தழுவி கனிந்துருகுவாள் அந்த காவியத் தலைவி
No comments:
Post a Comment