அதிகாலை அரும்பு
LIFE IS SHORT
MAKE IT SWEET
காலம் சிறிது கனவுகள் பெரிது
கவலைப் படுவதே மனது
என்றும்
தேவையோ பெரியது
காலமோ சிறியது
என்றும்
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே வா... வா.............. வாவா
என்றெல்லாம் வாழ்க்கையின் சுகத்தை நாம் அனுபவிக்க
அழைப்புவிடுக்கும் இந்த அற்புதமான பாடல் வரிகள்
வானம் உனக்கு வழி விடும் வரைக்கும் அனுபவி ஜோராய் அனுபவி
என்று வாழ்வின் சுகங்களை அனுபவிக்க வலியுறுத்தும் |
மற்றொரு பாடலில்
இல்லாத ஏட்டிலே
எழுதாத பாட்டிலே
சொல்லாத சொல்லிலே
சுவையாகும் காதலே
என காதலின் சிறப்பைச் சொல்லலாம் |
இந்தக்காதலானது காலையில் அரும்பு விட்டு மாலையில்
மலர்வதை பல காவியங்கள் சொல்கின்றன
வள்ளுவரோ ......
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந்நோய்
என்பதாகச் சொல்வார் |
அதாவது
காலைப்பொழுதில் அரும்பு விட்டு பகலெல்லாம் மொட்டாக இருந்து
மாலை நேரத்தில் மலராக மலர்கின்றது இந்தக் காதல் நோய் எனப் பொருள்கொள்ளும்
இதை அப்படியே திரைப்படப் பாடலொன்று
அதிகாலை அரும்பாய்த்தோன்றி
பகல் நேரம் மலராய் மாறி
இளமாலைத்தென்றல் ஏறி
இணையானோம் வாழ்த்துக் கூறி ......
என்று திருக்குறளுக்கு இணையான விளக்கம் தரும் |
பாடல்: நீ மேகம் ஆனாலென்ன
படம் :தாயில்லாக் குழந்தை
இன்னொரு பாடலில்
அந்தியில் மயங்கி விடும்
காலையில் தெளிந்து விடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால்
துன்ப நிலை மாறிவிடும்
என காலையில் அரும்பி அந்தியில் மயங்குவதை இந்தப்பாடல் வரிகள் எடுத்துரைக்கும்
மற்றுமொரு பாடலிலோ ....
காமன் கையில் வில்லெடுத்து
அஞ்சுவகைப் பூத் தொடுத்து
பூமகளின் நெஞ்சினிலே
போர் தொடுக்கும் நேரம் எது? [ஆண்]
மஞ்சள் வெய்யில் மாலை அது [பெண்]
காமன் கை வில்லேடுப்பதையும் , போர் தொடுப்பதையும்
விவேக சிந்தாமணிப் பாடல் ஒன்று ஓவியமாய் வரைகிறது |
அலகு வாள் விழி ஆயிழை நன் நுதல்
திலகம் கொண்டெதிர் செஞ்சிலை மாரனும்
கலகமே செய்யும் கண் இதுவாம் என
வேர் அம்பு ஐந்தையும் வைத்து வணங்கினான்
வளைந்த வாள் போலும் கண்ணுடைய பேரழகி இவள் நெற்றியில்
இட்டிருக்கும் பொட்டைக் கண்டே ,கரும்பு வில் ஏந்திவந்த மன்மதன்
இவளுடைய கண்கள் , மிகுந்த கலக்கத்தைச் செய்யக் கூடியவை என்று
தன் கையில் இருந்த மலர் அம்புகள் ஐந்தையும் அவள் முன்
வைத்து வணங்கி நின்றான் |
என்பதாகப் பொருள்படுவதோடு ,அந்தப்பாடலை அப்படியே பிரதிபலிக்கும் |
இன்னும்
காலையில் அரும்பாகி அந்தியில் மலராகி
காதலில் உருவானதால் ..
என்ற வரிகள் குறளை நினைவு கூறும் |
பாடல்: சிலையோடு விளையாடவா
படம் : வீரக்கனல்

thEvai endru thangaL pathivil paarththavudan thEvaiyaippaRRi oru rickshawil eluthyirunthathu ngaapakam vanthathu |
ReplyDeletethEvaiyuLLavan vaNangukiRaan
thEvaiyaRRAvan vaNangappadukiRaan