Tuesday, 22 September 2015

                                              பார்வை ஒன்றே போதுமே 

                                     ஆதாம் ஏவாள் அடிக்கல் நாட்டிய ஆனந்த மாளிகை -காதல் மாளிகை .அந்தக் காதல் மாளிகைக்குள் நுழைவதற்கு திறவுகோலாய் இருப்பது காதலர்தம் பார்வை .
                                        அதனால்தானோ என்னவோ
                         நம் காதல் உள்ளம் கலைக்கோயில் 
                         நம் கண்கள்  கோயிலுக்கு வாசல் 
                         நமதாசை கோயில் மணியோசை -அதில் 
                        அன்புவண்ண மலர் பூஜை 
பாடல்:[ நான் உன்னைச்சேர்ந்த செல்வம்]
படம் : கலைக்கோயில்
                                   என்று காதலின் புனிதத்தை தெய்வீகத்திற்கு இணை
வைப்பான் கவிஞன் .
                                  இல்லாமலா காதலார்தம் உள்ளத்தை கோயிலுக்கும்
கண்களை வாசலுக்கும் ஆசையை மணியோசைக்கும்  அன்பை மலர் பூஜைக்கும் உவமை வைத்துப்  போற்றுவான் .
                                  காதலர் தம் பார்வையும் அதன் வலிமையையும் உணர்த்த வந்த கவிஞன்
                             பார்வை ஒன்றே போதுமே 
                             பல்லாயிரம் சொல் வேண்டுமா?
                                                                   என்று எளிமையாகச் சொல்வான்
பாடல் :பார்வை ஒன்றே
படம் : யார் நீ


 இதைத்தான் வள்ளுவர்

                       கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச் சொற்கள் 
                       என்ன பயனும் இல                                                            [1100]

காதலர் இருவர் கண்களும் ஒத்த பார்வையில் அன்பால் ஒன்றுபடும்போது
வாய்ச் சொற்கள் எந்த வித பயனும் இல்லாமல் போய் விடுகின்றன  என்று
பொருள் விளக்கும் .

     இதனையே திரைப்பட பாடல் ஒன்று
                            என்ன என்ன வார்த்தைகளோ 
                            சின்ன விழிப் பார்வையிலே  
                            சொல்லிச் சொல்லி முடித்துவிட்டேன் 
                            சொன்ன கதை புரியவில்லை
பாடல்:   என்ன என்ன ....
படம்: வெண்ணிற ஆடை


   ஆம் .பார்வையில் காதல் ரசத்தை வடித்தபின் வார்த்தைகள் எதற்கு ?

இன்னொரு பாடலில்
                               கண்களின் வார்த்தைகள் புரியாதோ 
                               காத்திருப்பேன் என்று தெரியாதோ 
பாடல்:  கண்களின் வார்த்தைகள்..
படம் : காத்திருந்த கண்கள்

என்று தன பார்வையின் வலிமையை அழுத்தமாய் பதிவு செய்வாள்.

இன்னும் சுவையாய்
                               விழி ஓரங்களில் சில நேரங்களில் 
                               வரும் பாவங்களும் கலையாகும் 
                               அந்தக்கவிதைகளில்  உள்ள பொருளறிந்து 
                               அதைச் சுவைப்பதுதான் கலையாகும் 
பாடல் : காதல் எனும் பொன் வீதியில்
படம் : பூக்காரி

விழியின் பாவங்களே காதல் எனும் கவிதையை இந்தப்பாடல் உணர்த்தும் .

இன்னும்

                                  கண்களால் காதல் காவியம் 
                                  விழி காட்டிடும்  உயிர்  ஓவியம் 
பாடல் :கண்களால் காதல் காவியம்
படம் சாரங்கதாரா
   மேலும்
                            மௌனமே பார்வையாய் -ஒரு 
                                     பாட்டுப் பாடவேண்டும் .
                            நாணமே ஜாடையாய்  -ஒரு 
                                     வார்த்தை பேசவேண்டும்
பாடல் :மௌனமே பார்வையாய்
படம்: கொடிமலர் :

இன்னும்
                              பெண்மையின் பார்வை ஒரு கோடி -அவை 
                              பேசிடும் வார்த்தை  பல கோடி
பாடல் : இரவுக்கு ஆயிரம் கண்கள்
படம் : குலமகள் ராதை

 போன்ற பாடல்களின் வரிகளும் குறளுக்கு இன்னும் சுவை சேர்க்கும்




No comments:

Post a Comment