கட்டிக்கொள் ஒட்டிக்கொள்
காவல் இல்லா மாளிகைக்கு காவலுக்கு வந்தவனே
கன்னமிட வந்து நின்றால் என்ன கொடுப்பாய்
என்று அவன் கேட்க
தேவை என்னும் காரணத்தால் திருடனையும் நான் மதித்து
திரும்பவும் கன்னமிட என்னைக் கொடுப்பேன் .
என இனிதாய் பதிலுரைப்பாள்
கையணைந்த வேளையிலே
கண்ணிரண்டும் மயங்குவதேன்
என அவன் கேட்க
மின்சாரம் பாய்ந்ததுபோல்
மேனியெல்லாம் நடுங்குவதேன்
என்று எதிர் கணை தொடுப்பாள்
இப்படி உள்ளத்தாலும் உடல் உணர்வுகளாலும் நெருங்கும் காதலரின் அணைப்பானது இடையறுத்துச் செல்ல என்னும் காற்றுக்குக் கூட வழிவிடாதுதானே
இதனைத்தான் வள்ளுவர் ,
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப்படாஅ முயக்கு [1108]
காற்றுகூட இடைபுகுந்து செல்ல முடியாதபடி தழுவிக்கொள்வது
காதலர்க்கு இனிமையுடைய செயலாகும் .
இதைத்தான் திரைப்பட பாடலில்
எண்ணிக்கொள் ஏந்திக்கொள்
கன்னத்தின் கிண்ணம் வந்து வழியாமல்
என்று ஆசையாய் அவனை அழைக்க அவனோ
கட்டிக்கொள் ஒட்டிக்கொள்
காற்று நம்மிடையே நுழையாமல்
என குறளை பாடலாசிரியர் நிலை நிறுத்துவார்
பாடல் : மயங்கி விட்டேன்
படம் : அன்னமிட்ட கை
மற்றொரு பாடலில்
குளிர் தென்றல் வர இடமில்லையென
ஒன்று சேர்ந்தே இன்பம் காண்போம்
என குறளைத் தழுவி இயற்றப்பட்டிருக்கும் .
பாடல்: கொஞ்ச நேரம்
படம் :சிரித்து வாழ வேண்டும்
கார் குழலை நீராட்டி கண்ணிரண்டைத் தாலாட்டி
தேனிதழில் முத்தமிட்டு சிரித்திடும் தென்றல் - வண்ண
தேகம் எங்கும் நீரெடுத்து தெளித்திடும் தென்றல்
என்றெல்லாம் தென்றலின் உன்னதத்தை சொல்ல வந்தவள், மணமுடித்து பள்ளியறைக்குள் நுழைகிறாள் .முதலிரவு அறையின் சூழலையும்
மணமக்களின் நிலைப்பாட்டையும்
மணமாலை சூட்டி பலபேரும் வாழ்த்த
வளையாடும் என் கை விரலில்
கணையாழி பூட்டி புதுப்பாதை காட்டி
உறவாடும் திருநாளின் இரவில்
என்று அவள் பாட
இளந்தென்றல் காற்றும் வளர் காதல் பாட்டும்
விளையாடும் அழகான அறையில்
சுவையூறும் பாலும் கனிச்சாறும் கொண்டு
அழகே நீவருகின்ற நிலையில்
ஆஹா .. ஆஹா .. என அவன்
அழகாய் பதிலுரைத்ததாய் கவிஞர் வடிவமைத்திருப்பார் .
உணர்வுகள் சங்கமிக்கும் அந்நிலையை அவள்
கட்டிலிலே கலந்திருக்கும்
காதலர்கள் மேனியிலே
வட்டமிட்டு பாதை தேடி
வலம் வரும் தென்றல் -போக
வழியில்லாமல் வந்தவழி திரும்பிடும் தென்றல்
என்ற வரிகளின் மூலம் குறளின் கருத்தை நியாப்படுத்துவார் .
பாடல் : பொதிகைமலை உச்சியிலே
படம் : திருவிளையாடல்
மற்றொரு பாடலில் ,
தென்றல் வந்து மெல்ல மெல்ல என்னைத் தழுவும் [அவன் ]
தென்றலுக்குப் பாதையின்றி என்னைத் தழுவு .[அவள் ]
பாடல் : பள்ளியறைக்குள் வந்த
படம் : தர்மம் எங்கே
என்ற வரிகளும்
தலையை நீட்டும் இந்த நிலவு தலைமை தாங்கட்டும் [அவன் ]
தழுவும்போது வீசும் தென்றல் விலகி ஓடட்டும் .[அவள் ]
பாடல் :நெருங்கி நெருங்கி
படம் : நேற்று இன்று நாளை
என்ற வரிகளும்
குறளின் இனிமையை நினைவூட்டும் .

No comments:
Post a Comment