Thursday, 17 September 2015

                                                நோய் தீர்க்கும் மருந்து 


                  என் நாளும் அழியாத நிலையிலே காதல் ஒன்றே தான் வாழும் இந்த உலகிலே .
   இந்தக்காதலில் கனிந்துருகும் அவன் நெஞ்சமோ  அவளை
அன்பின் அமுதமே; அழகின் சிகரமே; ஆசை வடிவமே ;உலகின் அதிசயமே;
என்றெல்லாம் வர்ணித்து , அதிசயிக்கிறது.இந்தக் காதலர்தம் பார்வையில் ஒன்றானது நோயைக் கொடுப்பதாகவும், மற்றொன்று அந்த நோயைத் தீர்ப்பதாகவும் வள்ளுவர் ஒரு குறளில் சொல்லுவார் .

                     இருநோக்கு இவளுண் கண் உள்ளது ஒருநோக்கு 
                     நோய் நோய்க்கொன்ற அந்நோய் மருந்து                        [1091  

                                             இப்பெண்  தன்  மைதீட்டப்பட்ட கண்களில் இரண்டு பார்வைகள் உள்ளன .ஒன்று [காம]நோயை உண்டாக்குகிறது .மற்றொன்று 
அந்நோய்க்கு மருந்தாக இருக்கின்றது எனப் பொருள்விளக்கம் தரும்.
இக்குறளின் வரிகளை அப்படியே கையாண்டிருக்கும் திரைப்படப் பாடலாசிரியரோ 

                        கண்ணிரண்டும் மின்ன மின்ன 
                        காலிரண்டும் பின்னப்  பின்ன  
                        பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா -என் 
                         பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா 

             என தன்  காதல் நோய் தீர்க்க அவளிடம் மருந்து கேட்க, அவளோ 

                          கட்டழகு துள்ள துள்ள 
                          காதல் கதை சொல்ல சொல்ல 
                          பக்கம் பக்கம் வருவதென்ன சொல்லையா -என் 
                          பார்வையிலே மருந்தொன்று இல்லையா 
              
  என்று தன பார்வையிலே மருந்திருப்பதை உணர்த்துவாள் .

       அந்தக்குறளின் உன்னதத்தை எளிதாய் நாம் உணரத்தந்த கவிஞரை 
மனதாரப் பாராட்டலாம் .

பாடல் : கண்ணிரண்டும் மின்ன மின்ன 
படம் :     ஆண்டவன் கட்டளை 

மற்றொறு பாடலில் 
                                பல்வரிசை  முல்லையென்றால் கன்னியிளமானே 
                                பாடும் வண்டாய் நான் வரவா கன்னியிளமானே          -என்று 
பெண்ணழகைப்  போற்ற வந்த கவிஞர் 
                                  பார்வையிலே நோய் கொடுத்தாய் கன்னியிளமானே
                                  பக்கம் வந்து தீர்த்துவைப்பாய்  கன்னியிளமானே        -என 
அந்த அழகோவியத்தின் இரு கண் பார்வையை எளிதாய்ச் சொல்லி 
குறளையும் நம் முன் நிலை நிறுத்துவார் .

பாடல் : கண்ணிலேஇருப்பதென்ன 
படம்      அம்பிகாபதி 
                                                                 மேலும் :

                                    கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய் 
                                    கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய் 
பாடல் :கண்மணியே பேசு 
படம்:     காக்கிச் சட்டை 
                                              என்ற பாடல் வரிகளும் 
                                       
                                    உன்னாலே நான் கண்ட காயங்களை 
                                                   முன்னும் பின்னும் அறிவேன் 
                                     கண்ணாலே நீ செய்யும் மாயங்களை 
                                                     இன்றும் என்றும் அறிவேன் 

பாடல் : சொர்கத்தின் வாசற்படி 
படம் :     உன்னைச் சொல்லி குற்றமில்லை 

                                என்ற பாடல் வரிகளும் குறளின் மே[மெ ]ன்மையை  நம்முன் வடிவமைக்கும் .
                       
                                










No comments:

Post a Comment