Wednesday, 16 September 2015

          அறம்,பொருள்,இன்பம் எனப் பகுத்து அதனை அழகுறத்தொகுத்து,  நாம்
அனைவரும் பயன்பெறும் வண்ணம் படைக்கப்பட்டது  திருக்குறள் முத்தொகுப்பு என்பதால் முக்கனியின் சாறெடுத்து ,முத்தமிழின் தேனெடுத்து
முப்பாலிலே கலந்து எப்போதும் அள்ளிப்பருகிட அருளப்பட்டது.
         அதிலும் கற்கண்டு,பாகு,கனிரசத்தேனும்கூடக் கசந்திடும் வண்ணம்
அமைந்திட்ட காமத்துப்பாலை ரசனையோடு அணுகத்தந்திருக்கிறார் .

        விரசம்,  சரசம் [ஊடல்] சற்றே தலை தூக்கிடினும்  அதனை ஒருவித
உன்னத --ரசம் கலந்து பருகத்  தந்திட்டார்

          செம்மாதுளையில் கொஞ்சம் செம்மாங்கனியில் கொஞ்சம் சரியாய்க்  கலந்திட்ட கலவையாய் நமக்காகவே தந்து அந்தக் கருவூலத்தை நாம் என்றென்றும் வணங்கிடச் செய்தார் .

       அதனால்தானோ என்னவோ ஐம்பதுகள் தொட்டு இன்றுவரையிலும் கூட
குறிப்பாக காமத்துப்பாலைத் தழுவியே கவிஞர்கள் திரைப்படப் பாடல்களை
புனைந்திருகின்றனர்
                 நானும்கூட அவ்வழியிலே அவற்றையே கோர்வையாக்கி குறள்களையும் சரியாகநினைவு கூர்ந்து ஒருவித பாடல் குவியலாய்
சிற்சில தலைப்புகளின்கீழ் உங்களிடம் உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொள்ள
விழைகிறேன்.  

No comments:

Post a Comment